கரோனா குறித்த விழிப்புணர்வு: அரசுப் பள்ளிக்கு சிறப்பு விருது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 12, 2020

கரோனா குறித்த விழிப்புணர்வு: அரசுப் பள்ளிக்கு சிறப்பு விருது


கரோனா குறித்த விழிப்புணர்வு:அரசுப் பள்ளிக்கு சிறப்பு விருது

பள்ளி மாணவர்கள் மூலம் கரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற் படுத்திய ராஜாவூர் அரசு பள் ளிக்கு சிறப்பு விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த ராஜாவூரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக் கப் பள்ளியின் தலைமை ஆசிரியை இந்திரா, ஊரடங்கு காலத்தில் பள்ளி மாணவர்கள், பெற்றோர் பாதுகாப்புடன் இருப்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளி யிட்டார். இது பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோரிடம் அதிக வரவேற்பை பெற்றது.

அரசுப் பள்ளி தலைமை ஆசிரி யையுடன் இணைந்து அதே பள்ளி யில் 2-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் தேவிகா, சிவானி ஆகியோர் கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறு வனம் ராஜாவூர் அரசு பள்ளிக்கு சிறப்பு விருதை வழங்குவதாக அறி வித்துள்ளது. மாணவிகள் நடித்து வெளியான விழிப்புணர்வு வீடி யோவை 3 லட்சம் பேர் பார்த்துள்ள தால் சிறப்பு விருதுக்கு அரசு பள்ளி தேர்வாகியுள்ளது.

No comments:

Post a Comment