PASSPORT ல் புதிய அம்சம் விரைவில் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, June 24, 2020

PASSPORT ல் புதிய அம்சம் விரைவில்

PASSPORT ல் புதிய அம்சம் விரைவில்


சிப் ’ பொருத்தப்பட்ட மின்னணு கடவுச்சீட்டுகளை (இ-பாஸ்போா்ட்) அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

கடந்த 1967, ஜூன் 24-இல் இந்திய கடவுச்சீட்டுகள் சட்டம் நிறைவேற்றப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 24-ஆம் தேதியன்று ‘கடவுச்சீட்டு சேவை தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது

. இந்த ஆண்டு கடவுச்சீட்டு சேவை தினத்தையொட்டி, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை பேசியதாவது:

அதிநவீன பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ‘சிப்’ பொருத்தப்பட்ட மின்னணு கடவுச்சீட்டுகளை அறிமுகப்படுத்துவதற்காக, நாசிக்கில் உள்ள இந்திய பாதுகாப்பு அச்சகம், தேசிய தகவலியல் மையம் ஆகியவற்றுடன் இணைந்து வெளியுறவு அமைச்சகம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. தற்போது கொள்முதல் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மின்னணு கடவுச்சீட்டுகள் அறிமுகத்தால், இந்திய பயண ஆவணங்களின் பாதுகாப்பு வலுவடையும். முன்னுரிமை அடிப்படையில் இந்த கடவுச்சீட்டுகள் அறிமுகப்படுத்தப்படும். கடந்த 6 ஆண்டுகளில் கடவுச்சீட்டு விநியோக சேவைகள் முழுமையான மாற்றத்தை கண்டுள்ளன.

நாடு முழுவதும் 488 மக்களவைத் தொகுதிகளில், அஞ்சலக கடவுச்சீட்டு சேவை மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் இந்த மையங்கள் இருக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கமாகும். 

பொதுமுடக்கம் காரணமாக, அதற்கான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது தளா்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால், பணிகள் மீண்டும் உத்வேகம் பெறும் என்றாா் எஸ்.ஜெய்சங்கா்

No comments:

Post a Comment