கூகுள் பே குறித்து RBI அளித்த அதிர்ச்சி தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, June 24, 2020

கூகுள் பே குறித்து RBI அளித்த அதிர்ச்சி தகவல்

கூகுள் பே குறித்து RBI அளித்த அதிர்ச்சி தகவல்
இந்தியாவின் பண பரிவர்த்தனை செயலியில் கூகுள் பே பிரதானமாக உள்ளது. பெரும்பாலானோர் ஜி பே வைத்து தான் பணத்தை டிரான்ஸ்பர் செய்கின்றனர். பெரிய கடை தொடங்கி 10 ரூபாய் செலுத்த வேண்டிய பெட்டிக்கடை வரை கூகுள் பே தான் பயன்படுத்தப்படுகிறது.


இந்நிலையில் கூகுள் பே செயலி இந்திய அரசின் வணிக சட்டங்களுக்கு உட்படவில்லை, ஆர்பிஐ அனுமதி பெறவில்லை, கூகுள் பே பயனர்கள் பதியும் ஆதார், பான் வங்கி விவரம் போன்ற தனிநபர் விவரங்களுக்கு பாதுகாப்பு இல்லை போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஆர்பிஐ அனுமதி வாங்காமல் கூகுள் பே சேவையை எவ்வாறு இந்தியாவில் செயல்படுத்த முடியும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதுகுறித்து உடனடியாக தாக்கல் செய்யும்படி ரிசர்வ் வங்கிக்கும், கூகுள் நிறுவனத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் கூகுள் பே ஒரு மூன்றாம் தரப்பு பயன்பாட்டு செயலிதான் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது. 

அதன் செயல்பாடுகள் 2007ஆம் ஆண்டின் கடன் மற்றும் தீர்வு முறை சட்டத்தை மீறவில்லை என ரிசர்வ வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூகுள் பே தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில் தங்களது செயலி வங்கிகளுக்கு தொழில்நுட்ப ரீதியில் மட்டும் உதவுகிறது என்றும், அதற்கு அனுமதி வாங்கத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

 இதையடுத்து இந்த வழக்கு விசாரணை ஜூலை 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment