WHATSAPP ன் அடுத்த வர உள்ள புதிய அப்டேட் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 7, 2020

WHATSAPP ன் அடுத்த வர உள்ள புதிய அப்டேட்

WHATSAPP ன் அடுத்த வர உள்ள புதிய அப்டேட்



ஊரடங்கு காரணமாக வாட்ஸ் ஆப்பின் செயல்பாடுகள் அதிகரித்து வருவதால் அடுத்தடுத்த சூப்பர் அப்டேட்டுகளை வாட்ஸ் ஆப் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் வாட்ஸ் ஆப்பின் மல்டி-பிளாட்ஃபார்ம் தொழில்நுட்பம் பயனர்களின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அப்டேட்களில் ஒன்று . பயனர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்கள் மூலம் அவர்களின் வாட்ஸ் ஆப் கணக்கை பயன்படுத்தலாம். இந்த அப்டேட் அனைத்து வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கும் வெகு விரைவில் கிடைக்க இருக்கிறது.


இந்த மல்டி-பிளாட்ஃபார்ம் அம்சம் , கடந்த ஆண்டு நவம்பரில் ஐபோன் பயனாளர்களின் வாட்ஸ்அப்பின் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டது.

இந்த புது  மல்டி-பிளாட்ஃபார்ம் சிறப்பம்சங்கள் கொண்ட வாட்ஸ் ஆப், உபயோகிப்பாளர்  வழியாக பல்வேறு சாதனங்களாகிய ஸ்மார்ட்போன், டெஸ்க்டாப், டேப்லட்களில் ஒரே கணக்கில் செயல்படும்.

இதற்கான சோதனைகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த புதிய அம்சத்திற்கு, முக்கியமாக பயனர்கள் வெவ்வேறு சாதனங்களில் பயன்பாட்டில் இருக்கும் தங்களது வாட்ஸ் ஆப் கணக்குகளை சரிபார்க்க வேண்டும்.


இந்த மல்டி பிளாட்பார்ம் அம்சம், ஆண்ட்ராய்டில் வாட்ஸ் ஆப் v2.20.152 புதிய பீட்டா வெர்சனில் வடிவமைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால், இந்த அம்சம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை.

தற்போது, ​​பல சாதனங்களில் ஒரே கணக்கைப் பயன்படுத்தப் பயனர்களை வாட்ஸ்அப் அனுமதிக்காது. பயனாளர்களின் பரிந்துரையின் படி இது விரைவில் அறிமுகமாக்கப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment