பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு - அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 7, 2020

பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு - அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலனை


பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு - அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலனை

பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வினை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலனை நடத்தி வருகிறது

கொரோனா பாதிப்பு காரணமாக மாணவர்கள் அதிக அளவில் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு ஆன்லைன் முறை தேர்வு இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 


ஆன்லைன் முறையிலும் மற்றும் நேரடியாகவும் தேர்வெழுதும் வகையில் தேர்வு நடத்தப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளது இதில் இறுதியாண்டில் சுமார் 1 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். தற்போது கொரோனோ பாதிப்பு காரணமாக கல்லூரிகள்.மூடப்பட்டுள்ளன

 இருப்பினும் இறுதியாண்டு மாணவர்களுக்கு விரைவாக தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது.

அதே நேரத்தில் தேர்வினை நடத்தும் போது மாணவர்கள் அதிகளவில் திரளக்கூடிய சூழல் உள்ளது இதனை தவிர்க்கும் வகையில் அண்ணா பல்கைக்கழகம் தேர்வு நடத்த புதிய வழிமுறையினை ஆலோசித்து வருகிறது.


 அதன்படி இறுதியாண்டு மாணவர்களுக்கு நடத்தவேண்டிய இறுதி செமஸ்டர் தேர்வினை ஆன்லைன் முறையில் நடத்த பரீசிலித்து வருகிறது.


மேலும் ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டாலும் நேரடியாகவும் தேர்வுகள் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment