தேசிய தர பட்டியல்: இந்த பல்கலைக்கழகம் முதலிடத்தை பிடித்துள்ளது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 7, 2020

தேசிய தர பட்டியல்: இந்த பல்கலைக்கழகம் முதலிடத்தை பிடித்துள்ளது


தேசிய தர பட்டியல்: இந்த பல்கலைக்கழகம் முதலிடத்தை பிடித்துள்ளது


தேசிய அளவிலான தனியார் பல் கலைக்கழகங்களில் எஸ்ஆர்எம் அறிவியல், தொழில்நுட்ப பல் கலைக்கழகம் முதலிடம் பிடித் துள்ளது.

இதுதொடர்பாக எஸ்ஆர்எம் பல்கலை. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தேசிய அளவில் அரசு, தனி யார் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை கணக்கிட்டு ஆண்டுதோறும் தரப் பட்டியல் வெளியிடப்படும்.

 உலகப் புகழ் பெற்ற புள்ளியியல் கணக்கீட்டு அமைப்பான ‘நேச்சர் இன் டெக்ஸ்’ (NATURE INDEX) நிறு வனம் சிறந்த அறிஞர்களைக் கொண்டு பல்கலைக்கழகங் களின் செயல்பாடுகளை கவ னித்தும், பல்கலைக்கழகங்களில் சமர்ப்பிக்கும் ஆய்வுக் கட்டுரை களின் அடிப்படையிலும் அதன் தரத்தை நிர்ணயித்து தர நிர் ணயப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

கடந்த 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையுள்ள காலகட்டத்துக்கான பட்டியலில் தேசிய அளவில் சென்னை அடுத்த காட்டாங் கொளத்தூரில் உள்ள எஸ் ஆர்எம் அறிவியல், தொழில் நுட்ப பல்கலைக்கழகம் 21-வது இடத்தையும், இந்தியாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகங் கள் எனும் பிரிவில் முதலிடத் தையும் பிடித்துள்ளது.

இது மட்டுமின்றி, தேசிய அளவில் வேதியியல் படிப் பில் 19-வது இடம், இயற்பியல் பிரிவில் 28-வது இடம், இயற்கை, அறிவியல் படிப்புகளில் 5-வது இடத்தை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

பல்கலைக்கழகம் தொடங்கி யது முதல் இதுவரை எஸ்ஆர்எம் அறிவியல், தொழில்நுட்ப பல் கலைக்கழகம் சார்பில் 22 ஆயிரத் துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட் டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருப் பது குறிப்பிடத்தக்கது
. 

No comments:

Post a Comment