ஒருவர் கூட 10-வது வரை படிக்காத கிராமம்: 12-ம் வகுப்பில் தேர்ச்சிபெற்று அசத்திய பழங்குடிப் பெண் -நேரில் சென்று வாழ்த்திய டி.எஸ்.பி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, July 19, 2020

ஒருவர் கூட 10-வது வரை படிக்காத கிராமம்: 12-ம் வகுப்பில் தேர்ச்சிபெற்று அசத்திய பழங்குடிப் பெண் -நேரில் சென்று வாழ்த்திய டி.எஸ்.பி

ஒருவர் கூட 10-வது வரை படிக்காத கிராமம்: 12-ம் வகுப்பில் தேர்ச்சிபெற்று அசத்திய பழங்குடிப் பெண் -நேரில் சென்று வாழ்த்திய டி.எஸ்.பி
ஓசூர் அருகே மலைக்கிராமத்திலேயே முதல்முறையாக 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவி, மலைவாழ் மக்களுக்கு படிப்பறிவு கொடுக்க ஐஏஎஸ் ஆவதே இலட்சியம் என விருப்பம் தெரிவித்துள்ளார்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே உள்ளது பழங்குடியின இருளர்பட்டி கிராமம். விறகு சேகரிப்பது, கூலி வேலை மற்றும் ஆடு, மாடு மேய்ச்சலை பிரதானமாக கொண்ட இந்த கிராமத்தில் இதுவரை 10ம் வகுப்பு வரை படித்தவர்களே இல்லை என்கின்றனர்

பெண்களை பொருத்தவரை 8ம் வகுப்பு வரை மட்டுமே படிக்க வைத்து பள்ளிக்குச் செல்லும் இடைநிற்றல் இன்றும் தொடர்கிறது. இந்த நிலையில், இருளர்பட்டி கிராமத்தில் உள்ள முனிராஜ் - நாகம்மா தம்பதிகளுக்கு இரண்டு பெண், ஒரு ஆண் என மூன்று பிள்ளைகள். மூத்த மகளை 9ம் வகுப்புடன் திருமணம் செய்து வைத்து விட்டதாகவும், மகன் 7 வது மட்டுமே படித்த நிலையில் தற்போது கட்டடப்பணி செய்து வருகிறார்

கடைசி மகளான கிருஷ்ணவேணி பாலக்கோடு விடுதியில் தங்கி திருமல்வாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று தற்போது 12ம் வகுப்பில் 295 மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.


பழங்குடியின மக்கள் வசிக்கும் இருளர்பட்டியில் கல்வி என்பதே எட்டாக்கனியாக உள்ள நிலையில், முதல்முறையாக மாணவி ஒருவர் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதை அறிந்து தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா அவர்கள் கிருஷ்ணவேணியை நேரடியாக அவரது வீட்டிலேயே சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் பண உதவிகளையும் வழங்கினார்

டிஎஸ்பி சங்கீதா அவர்கள் மாணவியிடம் எதிர்க்கால விருப்பதைக் கேட்டபொழுது மாணவி ஐஏஎஸ் ஆவதே தனது விரும்பம் தெரிவித்ததால் மாணவிக்கு ஆலோசனைகளை வழங்கிய டிஎஸ்பி சங்கீதா அவர்கள் படிப்பிற்கான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் தமிழக அரசு ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் வழங்கி வருவதாகவும் கூறினார். 

அந்த மாணவி மேலும் வளர வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் தொலைப்பேசி எண்ணையும் அவர் வழங்கினார். அவரைத் தொடர்ந்து திருவாரூர் எஸ்பி துரை படிப்பு செலவிற்காக 10,000 வழங்கியுள்ளார்

மேலும் மாணவி கூறுகையில் மலைக்கிராம மக்கள் எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு தொடுவது எட்டாக்கனியாக உள்ளது. படிப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்ட நான் மென்மேலும் படித்து என் போன்ற மலைவாழ் மக்களின் படிப்பறிவு கொடுப்பதற்காக உதவுவேன் எனக் கூறினார்.

 இதற்காக அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ள அவர், தந்தையின் முயற்சியால் பன்னிரண்டாவது வரை படித்த நான் அரசு உதவினால் தொடர்ந்து படிப்பேன் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment