அரசு கலைக் கல்லூரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, July 19, 2020

அரசு கலைக் கல்லூரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

அரசு கலைக் கல்லூரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இளங்கலை பட்டப்படிப்பில் சேர, கல்லூரி முதல்வர் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.மேட்டுப்பாளையத்தில், அரசு கலை மற்றும் அறிவியல் கலைக் கல்லூரி உள்ளது. 

இங்கு பி.காம்., பி.காம்., சி.ஏ., பி.ஏ., ஆங்கிலம், பொருளாதாரம், சுற்றுலா மற்றும் மேலாண்மை, பி.எஸ்.சி., கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், வேதியியல், இயற்பியல் என ஒன்பது இளங்கலை பட்டப்படிப்பு பாடப்பிரிவுகள் உள்ளன.ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா, 60 மாணவர்களும், வேதியியல், இயற்பியல், பாடப்பிரிவில் தலா, 24 மாணவர்கள் என மொத்தம், 468 பேர் சேர இடம் உள்ளது.

இக்கல்லூரியில் சேர விரும்பும், தகுதியுள்ள மாணவர்கள், தமிழக அரசின் ஆணைக்கிணங்க, 20 ம் தேதி முதல், www.tngasa.in, www.tndceonline.org ஆகிய இணையதள முகவரி வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க இறுதி நாள், இம்மாதம் 31ம் தேதி.

 விண்ணப்பம் பதிவு செய்தோர் சான்றிதழ்களை, 25ம் தேதியிலிருந்து பதிவேற்றம் செய்யலாம். ஆக., 5ம் தேதி விண்ணப்ப சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இறுதி நாள்.பெற்றோர்களும், மாணவர்களும் நேரடியாக கல்லூரிக்கு வரவேண்டாம். 

சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு, 044-22351014, 044-22351015, என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, கல்லூரி முதல்வர்(பொ) சுகுமாரன் கூறியுள்ளார்

No comments:

Post a Comment