பாடங்கள் தொடர்பான வீடியோ பதிவு : இயக்குநா் கண்ணப்பன் உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, July 19, 2020

பாடங்கள் தொடர்பான வீடியோ பதிவு : இயக்குநா் கண்ணப்பன் உத்தரவு

பாடங்கள் தொடர்பான வீடியோ பதிவு : இயக்குநா் கண்ணப்பன் உத்தரவு
ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, அனைத்து பாடங்களுக்கும் வீடியோ பாடம் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு அமலில் உள்ளதால், பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்காதபடி, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவருக்கு, வீடியோ பாடங்கள், பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது பிளஸ் 1 வகுப்புக்கும், வீடியோ பாடங்கள் தயாரிக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், பள்ளி திறக்க தாமதமாக வாய்ப்புள்ளதால், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவன முதல்வர்கள் ஆலோசித்து, கருத்தாளர்களை தேர்வு செய்து, வீடியோ பதிவு நடத்த, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

 மாவட்டம் வாரியாக, வகுப்புகளுக்கு பாடங்கள் பிரித்து, அட்டவணை வழங்கப்பட்டு, வீடியோ பாடம் தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment