எட்டு வகையான அரசு உதவி தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, July 19, 2020

எட்டு வகையான அரசு உதவி தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

எட்டு வகையான அரசு உதவி தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் தாலுகாவில், 8 வகையான உதவி தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் சமூக பாதுகாப்பு திட்டம் தனி தாசில்தார் (பொறுப்பு) செல்வமூர்த்தி செய்திக்குறிப்பு;

தமிழகத்தில் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய உதவித்தொகை திட்டம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய உதவித்தொகை திட்டம், விதவை பெண்கள் ஓய்வூதிய உதவித்தொகை திட்டம் மற்றும் தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் முதியோர் ஓய்வூதிய உதவித்தொகை திட்டம்

.மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய உதவித்தொகை திட்டம், விதவை பெண்கள் ஓய்வூதிய தொகை திட்டம், திருமணம் ஆகாத (முதிர்கன்னி) ஓய்வூதிய உதவித்தொகை திட்டம், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதிய உதவித்தொகை திட்டம் ஆகிய 8 வகையான ஓய்வூதிய திட்டங்களுக்குரிய விண்ணப்பங்கள் இ- சேவை மையம் வழியாக விண்ணப்பிக்க முதன்மை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளனர்

.இதை, விழுப்புரம் மாவட்ட கலெக்டரும் அறிவுறுத்தியுள்ளார்.எனவே, விழுப்புரம் தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் 8 வகையான ஓய்வூதியத் தொகை பெறும் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment