தபால் தலை புகைப்பட போட்டியில் பங்கேற்க அஞ்சல் துறை அழைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, July 19, 2020

தபால் தலை புகைப்பட போட்டியில் பங்கேற்க அஞ்சல் துறை அழைப்பு

தபால் தலை புகைப்பட போட்டியில் பங்கேற்க அஞ்சல் துறை அழைப்பு
தபால் தலை வடிவமைப்பு புகைப்பட போட்டியில் பங்கேற்க அஞ்சல் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து கடலுார் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:இந்திய அஞ்சல் துறை சுதந்திர தினத்தையொட்டி தேசிய அளவில் யுனெஸ்கோ இந்திய உலக பாரம்பரிய தலங்கள் (கலாசாரம்) என்ற கருப்பொருளில் தபால் தலை வடிவமைப்புப் புகை படப்போட்டி MyGov போர்டல் தளத்தில் 7.7.20 ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய அளவில் அனைத்து வயது பிரிவுகளையும் சேர்ந்த போட்டியாளர்கள், .https//www.mygov.in/task/design-stamp-themed-unesco-world-heritage-sites-india-cultural/ உள்ள MyGov .போர்டலில் தாங்கள் பதிவு செய்த புகைப்படத்தை பதிவேற்றுவதன் மூலம் போட்டியில் பங்கேற்கலாம். பதிவுகள் சமர்ப்பிக்க கடைசி தேதி 27.7.20.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment