ஓய்வு பெற்ற தலைமை செயலாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் - அரசாணை வெளியீடு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, July 28, 2020

ஓய்வு பெற்ற தலைமை செயலாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் - அரசாணை வெளியீடு

ஓய்வு பெற்ற தலைமை செயலாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் - அரசாணை வெளியீடு
ஓய்வு பெற்ற தலைமை செயலாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் ஓய்வு பெற்ற கூடுதல் தலைமைச் செயலாளர்கள், பக்கத்து மாநிலங்களில் அளிக்கும் நலன்களை தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

கர்நாடகா மாநிலத்தில் ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் கள் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர்களுக்கு தொலைபேசி, மருத்துவ படிகள் தவிர பணியாளர்படி என்ற பெயரில் மாதந்தோறும் ரூ.10 ஆயிரத்து 500 தொகை வழங்குவதாகக் கூறி அதற்கான அரசாணையின் நகலை சமர்ப்பித்துள்ளனர்.

இதுபற்றி தமிழக அரசு கவனமுடன் ஆய்வு மேற்கொண்டது. சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்குவது போன்று, ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர்கள் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர்களுக்கும் என்.எம்.ஆர். பதிவேட்டை நிறுவ அரசு முடிவு செய்துள்ளது

. இந்த பதிவேட்டை பொதுப் பணித்துறை பராமரிக்கும். ஓய்வு பெற்ற அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதிக்குள் அந்த தொகை இ.சி.எஸ். மூலம் சென்று சேர்வதை பொதுப்பணித் துறை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment