விண்வெளி துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூ.10 லட்சம் பரிசு : அப்துல் கலாம் நினைவாக போட்டி ஒன்றை அறிவித்தது மத்திய அரசு!! - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, July 28, 2020

விண்வெளி துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூ.10 லட்சம் பரிசு : அப்துல் கலாம் நினைவாக போட்டி ஒன்றை அறிவித்தது மத்திய அரசு!!

விண்வெளி துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூ.10 லட்சம் பரிசு : அப்துல் கலாம் நினைவாக போட்டி ஒன்றை அறிவித்தது மத்திய அரசு!!
மறைந்த குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவாக பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் போட்டி ஒன்றை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

 முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கடந்த 2015-ஆம் ஆண்டு மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது அவர் மரணமடைந்தார். ஏவுகணை நாயகன் என அழைக்கப்படும் இவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்த நிலையில் கலாமின் நினைவாக மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கனவு காணும் துணிச்சல் என்ற தலைப்பிலான போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

. மத்திய பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங், புதுடெல்லியில் இதனை அறிவித்தார். பிரதமர் மோடி அறிவித்துள்ள தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்புத் துறை மற்றும் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் தனி நபர்கள் மற்றும் புதிய தொழில் நிறுவனங்கள் சார்பில் புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தும் வகையில், இந்த போட்டி அமைக்கப்பட்டுள்ளது. 

அங்கீகரிக்கப்படும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகையும் தனி நபருக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது

No comments:

Post a Comment