பிற மாநில மாணவர்களுக்கு ஆக., 12ல் விண்ணப்ப பதிவு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, July 27, 2020

பிற மாநில மாணவர்களுக்கு ஆக., 12ல் விண்ணப்ப பதிவு

பிற மாநில மாணவர்களுக்கு ஆக., 12ல் விண்ணப்ப பதிவு
'அண்ணா பல்கலையில்,பிற மாநில மாணவர்களுக்கான, மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு, ஆகஸ்ட் 12ல் துவங்கும்'என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள கல்லுாரிகளில், பி.இ., ~ பி.டெக்., படிப்புகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை, தமிழகஉயர்கல்வித் துறை சார்பில்,தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியே, ஆன்லைனில் மேற்கொள்ளப்படுகிறது

.அதேநேரம், அண்ணா பல்கலையின் வளாக கல்லுாரிகளான, கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லுாரி, குரோம்பேட்டை தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் திட்டமிடல் மற்றும் கட்டட வடிவமைப்பு கல்வி நிறுவனம் ஆகியவற்றில், பிற மாநில மாணவர்களுக்கு, அண்ணா பல்கலை சார்பில், நேரடி சேர்க்கை வழங்கப்படுகிறது.

நடப்பு கல்வி ஆண்டுக்கான சேர்க்கைக்கு, பிற மாநில மாணவர்களுக்கான விண்ணப்ப பதிவு, ஆகஸ்ட், 12ல் துவங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. பி.இ., ~ பி.டெக்., பி. ஆர்க்., ~ எம்.இ., எம்.டெக்., மற்றும், எம்சி.ஏ., படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

No comments:

Post a Comment