போன் சிக்னலில் சிக்கல் மரம் தேடும் மாணவர்கள் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, July 27, 2020

போன் சிக்னலில் சிக்கல் மரம் தேடும் மாணவர்கள்

போன் சிக்னலில் சிக்கல் மரம் தேடும் மாணவர்கள்
மொபைல் போன், 'சிக்னல்' கிடைக்காததால், மாணவர்கள், மரத்தின் மீது அமர்ந்து பாடம் படிக்கின்றனர்.

நீலகிரி மாவட்டம், கூடலுார், ஓவேலி, சந்தனமலையில் உள்ள, பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் டவர், சில மாதங்களாக, சரியான பராமரிப்பின்றி உள்ளது

>
.பள்ளிகளில், 'ஆன்லைன்' வகுப்புகள் நடந்து வரும் நிலையில், சிக்னல் கிடைக்காமல், மாணவர்கள் உயரமான இடங்களில் அமர்ந்து, பாடம் பயிலும் நிலை தொடர்கிறது. சிலர், மரங்களில் ஏறி அமர்ந்து, வகுப்புகளில் பங்கேற்கின்றனர்.

மக்கள் கூறுகையில், 'வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதால், எங்கள் பிள்ளைகள், வீட்டிலிருந்தபடியே, ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க வசதியாக, தடையின்றி மொபைல் போன் சிக்னல் கிடைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

No comments:

Post a Comment