இன்ஜினியரிங் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் நாளை முதல் ஆக.20 வரை சான்றிதழ் பதிவேற்றம்: அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 29, 2020

இன்ஜினியரிங் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் நாளை முதல் ஆக.20 வரை சான்றிதழ் பதிவேற்றம்: அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு

இன்ஜினியரிங் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் நாளை முதல் ஆக.20 வரை சான்றிதழ் பதிவேற்றம்: அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:
கடந்த ஆண்டு 2019ம் ஆண்டின் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு இணையதளம் வாயிலாக நடைபெற்று, டிஎப்சி மையங்களுக்கு மாணவர்கள் சென்றனர். 

தற்போது, கொரோனா காரணமாக இணையதளம் மூலம் சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இந்த சான்றிதழ் பதிவேற்றம் வரும் 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 20ம் தேதி வரை நடக்கிறது. மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் செல்போன் அல்லது கணினி மூலம் வீட்டிலிருந்தே சான்றிதழ்களை www.tneaonline.org இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யயலாம். 

விண்ணப்பப் பதிவு வரிசை எண்களின் அடிப்படையில், இரண்டு நாட்களில் 20,000 மாணவர்கள் வீதம், சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வகையில் அட்டவணைகொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நாட்களில் சான்றிதழ் பதிவேற்றம் செய்துகொள்ள முடியாதவர்கள் 12.8.2020 முதல் 20.8.2020 வரை தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் 044-22351014, 22351015 என்ற தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். மாணவர்கள், பதிவேற்றம் செய்வதற்கு முன்பாக, தங்களது சான்றிதழ்களை Digital Format மாற்றுவது மற்றும் அவர்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் போன்றவற்றை Image Format ஆக மாற்றுவது குறித்த வழிமுறைகள் அவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் instructions மூலமாகவும் மற்றும் வீடியோ மூலமாகவும் www.tneaonline.org இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது.

 டிஎன்இஏ இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட சான்றிதழ்களை அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் மூலம் அந்தந்த டிஎப்சி மையங்களில் 24.8.2020 முதல் 1.9.2020 வரை சரிபார்க்கப்படும். மாணவர்கள் நேரில் வரவேண்டிய அவசியமில்லை. சான்றிதழ் சரிபார்ப்பு பணிமுடிவடைந்ததும் ரேங்க் பட்டியல்தயாரிக்கப்பட்டு மாணவர்களின் பார்வைக்கு www.tneaonline.org இணையதள முகவரியில் தெரிவிக்கப்படும்

No comments:

Post a Comment