கலை, அறிவியல் கல்லூரிகள் வகுப்புகள் நேரம் மாற்றம் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, July 29, 2020

கலை, அறிவியல் கல்லூரிகள் வகுப்புகள் நேரம் மாற்றம்

கலை, அறிவியல் கல்லூரிகள் வகுப்புகள் நேரம் மாற்றம்
தமிழகத்தில் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதில் பெரும்பாலான கல்லூரிகள் ஷிப்ட் முறையில் இயங்கி வருகின்றன. 

இவற்றின் படி காலை 8.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு ஒரு பிரிவினருக்கு வகுப்புகள் முடியும். அதற்கு பிறகு 2 மணிக்கு மேல் அடுத்த பிரிவினருக்கு வகுப்புகள் தொடங்கும். 
முதல் ஷிப்ட்டில் படிக்கும் மாணவர்களுக்கு உணவு நேரம் மற்றும் போக்குவரத்து வசதிகள் பிரச்னை ஏற்படுவதால் அந்த நேரத்தை மாற்றி அமைக்க உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதன்படி, முன்பு இருந்தது போல காலை 9.30 மணிக்கு கல்லூரி தொடங்கி மாலை 4.30 மணிக்கு முடியும் வகையில் கல்லூரிகள் இயங்கவும், மதியம் 1 மணி நேரம் உணவு இடைவேளையுடன் நாள் ஒன்றுக்கு 6 பாடவேளைக்கு  அனுமதிக்கலாம் என்று உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 

முதற்கட்டமாக இந்த திட்டம் 50 கல்லூரிகளில் செயல்படுத்தவும் முடிவு செய்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், கல்லூரிகள் திறக்கப்படும் போது இந்த நேர மாற்றம் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது

No comments:

Post a Comment