"வேதியியலில் 24 மதிப்பெண்கள்தான் எடுத்தேன்!" - பொதுத்தேர்வு மதிப்பெண்களை வெளியிட்டு ஐஏஎஸ் அதிகாரி அறிவுரை! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 15, 2020

"வேதியியலில் 24 மதிப்பெண்கள்தான் எடுத்தேன்!" - பொதுத்தேர்வு மதிப்பெண்களை வெளியிட்டு ஐஏஎஸ் அதிகாரி அறிவுரை!

"வேதியியலில் 24 மதிப்பெண்கள்தான் எடுத்தேன்!" - பொதுத்தேர்வு மதிப்பெண்களை வெளியிட்டு ஐஏஎஸ் அதிகாரி அறிவுரை!

வேதியியல் பாடத்தில் 24 மதிப்பெண்கள்தான் எடுத்ததாக குறிப்பிட்டு ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

தற்போதைய காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என வற்புறுத்துவர். அதற்காக மாணவர்களை அனைத்து பாடங்களுக்கும் சிறப்பு வகுப்புகளுக்கு போகச்சொல்லி கட்டாயப்படுத்துவர். பல இடங்களில் குறைவான மதிப்பெண்கள் எடுத்த காரணத்தினால் சில மாணவர்கள் தற்கொலை முடிவுகளும் எடுக்கின்றனர்.

இந்த நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஊக்குவிப்பதற்காக அஹமதாபாத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி நிதின் சங்க்வான், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தான் எடுத்த மதிப்பெண் பட்டியலை வெளியிட்டு அறிவுரை வழங்கியுள்ளார்

அதாவது, "எனது 12ம் வகுப்பு தேர்வில் தேர்வில், வேதியியலில் எனக்கு 24 மதிப்பெண்கள் கிடைத்தன - தேர்ச்சி மதிப்பெண்களைக் காட்டிலும் 1 மதிப்பெண்ணே அதிகம். ஆனால் என் வாழ்க்கையிலிருந்து நான் என்ன விரும்புகிறேன் என்று அது தீர்மானிக்கவில்லை.

மதிப்பெண் சுமையுடன் குழந்தைகளை ஏமாற்ற வேண்டாம்

தேர்வு முடிவுகளை விட வாழ்க்கை இன்னும் அதிகமானவற்றை சந்திக்கவேண்டியுள்ளது.

தேர்வு முடிவுகள் நம்மை சுய மதிப்பீடு செய்வதற்கான வாய்ப்பாக இருக்கட்டுமே தவிர விமர்சனத்திற்காக அல்ல." என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய டிவிட்டர் பதிவு தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதுவரை 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அவரது பதிவை லைக் செய்துள்ளனர்.

 நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியான நிலையில் ஐஏஎஸ் அதிகாரி நிதின் சங்க்வானின் டிவிட்டர் பதிவு மிகச்சிறந்த அறிவுரையாக இருப்பதாக பலர் குறிப்பிட்டுவருகின்றனர்

No comments:

Post a Comment