மாற்றுச் சான்றிதழ் கேட்க வேண்டாம்; பள்ளிகளில் சேர்க்கை வழங்குங்கள்: மத்திய அரசு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 15, 2020

மாற்றுச் சான்றிதழ் கேட்க வேண்டாம்; பள்ளிகளில் சேர்க்கை வழங்குங்கள்: மத்திய அரசு

மாற்றுச் சான்றிதழ் கேட்க வேண்டாம்; பள்ளிகளில் சேர்க்கை வழங்குங்கள்: மத்திய அரசு
புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வியை உறுதி செய்யும் வகையில், பள்ளி மாற்றுச் சான்றிதழ்களை கேட்க வேண்டாம், பள்ளிகளில் மாணவர்களுக்கு அனுமதி அளிக்குமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகள், பள்ளியில் சேர முடியாமல் போவதைத் தடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உள்ளூர் பகுதிகளில் இருந்து வெளியேறு வெளி மாநிலம் அல்லது வேறு பகுதிகளுக்குச் சென்ற குழந்தைகளின் புள்ளி விவரத்தைச் சேகரிக்குமாறும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுபோன்ற குழந்தைகளின் பெயரை புலம்பெயர்ந்தவர்கள் அல்லது தற்காலிகமாக கிடைக்கப்பெறாத என்று குறிப்பிட்டு பதிவு செய்யுமாறும் அந்த அறிவுறுத்தல் அறிக்கையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும், தங்களது பள்ளியில் படித்த புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளின் நிலை குறித்து செல்லிடப்பேசி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு கேட்டறிய வேண்டும் என்றும், அவர்கள் தற்போதிருக்கும் இடத்தைப் பற்றியும் கேட்டறிய வேண்டும். 

அதுபோல புலம்பெயர்ந்து சென்ற பிள்ளைகளின் பெயர்களை தனியாக புலம்பெயர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டு தனியாக ஒரு பதிவேட்டை வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளின் பெயர்கள் பள்ளியின் பதிவேட்டில் இருந்து நீக்கப்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும், 

(ஒரு வேளை அவர்கள் மீண்டும் திரும்பி வந்து, பள்ளியில் சேரக் கூடும்) என்றும், பள்ளியில் சேர்க்கைக்காக வரும் அனைத்து மாணவர்களுக்கும் எவ்வித மாற்றுச் சான்றிதழ் உள்பட சான்றிதழ்கள் இன்றி அனுமதி வழங்குமாறும் மாநில அரசுகள் பள்ளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது பிள்ளைகளைப் பற்றி கொடுக்கும் தகவல்கள் சரியாக இருக்கும் என்று தெரிந்தால், அதன் அடிப்படையாக வைத்து அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிவுறுத்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment