மொத்தத்திலும், பாடவாரியாகவும் ஒரே மதிப்பெண் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் இரட்டை சகோதரிகள் அசத்தல் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, July 15, 2020

மொத்தத்திலும், பாடவாரியாகவும் ஒரே மதிப்பெண் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் இரட்டை சகோதரிகள் அசத்தல்

மொத்தத்திலும், பாடவாரியாகவும் ஒரே மதிப்பெண் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் இரட்டை சகோதரிகள் அசத்தல்

உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்தவர்கள் இரட்டை சகோதரிகள் மான்சி, மான்யா. 9 நிமிட வித்தியாசத்தில் இவர்கள் பிறந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஆஸ்டா பப்ளிக் பள்ளியில் படித்து வந்தனர். நேற்று முன்தினம் வெளியான சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் இருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்

. இருவரும் 95.8 சதவீதம் மதிப்பெண்ணை எடுத்துள்ளனர்.  அதில்,  பாடவாரியாகவும் இவர்கள் ஒரே மதிப்பெண்ணை எடுத்துள்ளதுதான் கூடுதல் ஆச்சர்யம். ஆங்கிலத்தில் சகோதரிகள் இருவரும் 98 மதிப்பெண், இயற்பியல், வேதியியல், உடற்கல்வி பாடத்தில் இருவரும் தலா 95 மதிப்பெண்கள் என ஒரே மாதிரி எடுத்துள்ளனர். 

இரட்டை சகோதரிகள் ஒரே மாதிரியான மதிப்பெண்களை எடுத்தது பெற்றோர், ஆசிரியர் மற்றும் நண்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment