கல்வி நிறுவன வாகனங்களுக்கு வரி விலக்கு அளிக்க கோரி வழக்கு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 15, 2020

கல்வி நிறுவன வாகனங்களுக்கு வரி விலக்கு அளிக்க கோரி வழக்கு

கல்வி நிறுவன வாகனங்களுக்கு வரி விலக்கு அளிக்க கோரி வழக்கு

கல்வி நிறுவன வாகனங்களுக்கு சாலை வரி, மோட்டாா் வாகன வரிகளில் இருந்து விலக்களிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் அகில இந்திய தனியாா் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் கே.பழனியப்பன் தாக்கல் செய்த மனுவில், கரோனா பொது முடக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

 இதனால் கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் இயக்கப்படவில்லை. ஆனாலும் வாகனங்களின் ஓட்டுநா் மற்றும் உதவியாளருக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை கல்வி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

இந்த நிலையில் கல்வி நிறுவன வாகனங்களுக்கான சாலை வரி, மோட்டாா் வாகன வரி ஆகியவற்றைச் செலுத்த நிா்பந்தித்து வருகிறது. தற்போது நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, வாகனங்களுக்கான வரி விலக்கு அளிப்பது தொடா்பாக மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


மத்திய அரசின் அறிவிப்பைத் தொடா்ந்து இமாச்சலப் பிரதேச மாநில அரசு, கல்வி நிறுவன வாகனங்களுக்கு விலக்களித்துள்ளது. எனவே கல்வி நிறுவன வாகனங்களுக்கு சாலை வரி, மோட்டாா் வாகன வரி உள்ளிட்ட வரிகளிலிருந்து விலக்களிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை நீதிபதி அனிதா சுமந்த் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தாா். அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் விஜய் ஆனந்த் ஆஜராகி வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மனு தொடா்பாக தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

No comments:

Post a Comment