இலவச, லேப்டாப்பில் பிளஸ் 2 பாடங்கள் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, July 13, 2020

இலவச, லேப்டாப்பில் பிளஸ் 2 பாடங்கள்

இலவச, லேப்டாப்பில் பிளஸ் 2 பாடங்கள்
தமிழக பள்ளிக் கல்வித் துறையின், 'வீடியோ' பாடங்களை, மாணவர்களின் இலவச, 'லேப்டாப்'பில் பதிவு செய்து தர, பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக, வரும், 31 வரை பள்ளி, கல்லூரிகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. '

பள்ளிகளை எப்போது திறப்பது என்பதை, இப்போது சிந்திக்க முடியாது' என, பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வீட்டில் உள்ள மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகள், 'ஆன்லைனில்' பாடம் நடத்துகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'டிவி' வழியே பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கல்வி, 'டிவி' மற்றும் தனியார் சேனல்களில், பாடங்கள் நடத்தப்பட உள்ளன.

அரசு கேபிள், 'டிவி' மற்றும், தமிழ்நாடு கேபிள் கார்பரேஷன் நிறுவனம் ஆகியவற்றின் இணைப்பில், 200ம் எண்ணில், அரசின் கல்வி, 'டிவி'யில் பாடம் நடத்தப்பட உள்ளது.


 இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை தயாரித்துள்ள கல்வி, 'டிவி'யின் வீடியோ பாடங்களை, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப்பில் பதிவு செய்து தர, அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.'

பென் டிரைவ்' வழியாக பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வழங்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment