பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் தர அனுமதி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 13, 2020

பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் தர அனுமதி

பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் தர அனுமதி
பட்டதாரி ஆசிரியர்களுக்கு, உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில், 1997 முதல், 2000ம் ஆண்டு வரையிலான, பின்னடைவு காலியிடங்களில், உயர்கல்வி தகுதியுள்ளவர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க அனுமதி வழங்கப்பட்டது.

அவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்கள், எம்.ஏ., - எம்.எஸ்சி., - எம்.எட்., படித்திருந்தால், அவர்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படாமல் இருந்தது.

தற்போது, நிபந்தனைகளுக்கு தளர்த்தப்பட்டு, உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க, பள்ளி கல்வி மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment