4.60 கோடி புத்தகங்களுடன் தேசிய 'டிஜிட்டல்' நூலகம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 13, 2020

4.60 கோடி புத்தகங்களுடன் தேசிய 'டிஜிட்டல்' நூலகம்

4.60 கோடி புத்தகங்களுடன் தேசிய 'டிஜிட்டல்' நூலகம்
கொரோனா நேரத்தில், 4.60 கோடி புத்தகங்களுடன் கூடிய, தேசிய அளவிலான, 'டிஜிட்டல்' நூலகம், மாணவர்களுக்கு கைகொடுக்கிறது.

கொரோனா தொற்று காரணமாக, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, 'ஆன்லைன்' வாயிலாக மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான வாய்ப்பு குறைந்து வருகிறது. 


இந்நிலையில், மாணவர்களுக்கு உதவ, மத்திய அரசு, ஒரு நூலகத்தை தயார் செய்துள்ளது. இதில், ஆரம்ப பாடம் முதல் சட்டம், மருத்துவம், இன்ஜி., போன்ற அனைத்து பாட புத்தகங்கள், ஒரே இணையத்தில் கிடைக்கின்றன.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தயாரித்த, இந்த தேசிய டிஜிட்டல் நூலகத்தில், 4 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. இந்த நூலகம்,


 http://ndl.iitkgp.ac.in

என்ற இணைப்பில் காணலாம்.


இது குறித்து கல்லூரி மாணவர்கள் கூறியதாவது: 'தேசிய, 'டிஜிட்டல்' நூலகத்தில், பிராந்திய மொழிகளில் புத்தகங்கள் உள்ளன. இந்த நூலகத்தில் தற்போது வரை, 4.60 கோடி புத்தகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளன.


 ஒவ்வொரு மாநில மாணவர்களும், தங்கள் மொழியில் புத்தகங்களை படிக்கலாம். இப்போதைய சூழலில், ஆன்லைனில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள், பத்திரிகைகளை கண்டுபிடித்து படிக்க முடிகிறது. ஆராய்ச்சி மாணவர்களுக்கு, இங்கு நல்ல ஆய்வு கட்டுரைகள் கிடைக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment