பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 13, 2020

பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டகலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன்கல்வி ஆகிய பாடப்பிரிவுகளுக்கு அரசுப் பள்ளிகளில் 2012ம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டு காலமாக, 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் ரூ.5,000 தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்டு, தற்போது ரூ.7,700 ஊதியம் பெற்று பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு வருடத்திற்கு 11 மாதச் சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.2012ம் ஆண்டிற்கான மே மாத ஊதியம் தொடங்கி, 2020ம் ஆண்டு மே மாதம் வரை 9 மாதம் ஊதியத்தை நிலுவையில்லாமல் உடனடியாக வழங்க வேண்டும். மேலும், கடந்த 2017ம் ஆண்டு சட்டசபையில் பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு செய்து நான்காண்டுகள் கடந்த நிலையில் இதுநாள் வரை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை, இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக செயல்படுத்த வேண்டும். 

இவர்களின் குடும்ப நலனையும், வாழ்வையும் கருத்தில் கொண்டு, இவர்களது பணியை வரைமுறைப்படுத்தி, காலமுறை ஊதியத்தில் பணியமர்த்திட வேண்டும்.

No comments:

Post a Comment