பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 13, 2020

பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2020ம் ஆண்டு சுதந்திர தின விழாவின்போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் முதல்வரால் வழங்கப்பட உள்ளது. 

குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

 மாநில அளவிலான உயர் மட்டக்குழு விண்ணப்பங்களை பரிசீலனை செய்து விருதுக்கு தகுதியான தனிநபர் மற்றும் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரரின் கருத்துரு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புத்தக வடிவத்தில் தயாரிக்கப்பட்டு அளவு புகைப்படத்துடன் பெறப்பட வேண்டும். எனவே, சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலரை நேரில் அணுகி வருகிற 20ம் தேதிக்குள் கருத்துருக்கள் சமர்ப்பிக்க வேண்டும்

No comments:

Post a Comment