கல்வி அலுவலகங்களில் 50 சதவீத ஊழியா்கள் பணிக்கு வர பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 14, 2020

கல்வி அலுவலகங்களில் 50 சதவீத ஊழியா்கள் பணிக்கு வர பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

கல்வி அலுவலகங்களில் 50 சதவீத ஊழியா்கள் பணிக்கு வர பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தின் அனைத்துக் கல்வி அலுவலகங்களிலும் நாள்தோறும் 50 சதவீத ஊழியா்கள் பணிக்கு வர பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை:

கரோனா நோய்த்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் அரசால் தளா்த்தப்பட்டு, கடந்த மே18-ஆம் தேதி முதல் வாரத்துக்கு 6 வேலை நாட்களுக்கு ஏற்ப (சனிக்கிழமை உள்பட) இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும் எனவும் அரசு ஊழியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தற்போது தேங்கியுள்ள கோப்புகளை விரைந்து முடிக்கும் பொருட்டு, அரசு அலுவலகத்தில் 50 சதவீத பணியாளா்கள் சுழற்சி முறையில் தினசரி வருகை தந்து, அரசுக்கு அறிக்கை அனுப்புமாறு தலைமைச் செயலாளா் உத்தரவிட்டுள்ளாா்.

எனவே சம்பந்தப்பட்ட பணியாளா்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சுழற்சி முறை பணியில் கட்டாயம் பணிபுரியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment