தனியாா் பள்ளிகளில் 75% கல்விக் கட்டணத்தை வசூலிக்க அனுமதி - Minnal Kalvi Seithi

Breaking

Friday, July 17, 2020

தனியாா் பள்ளிகளில் 75% கல்விக் கட்டணத்தை வசூலிக்க அனுமதி

தனியாா் பள்ளிகளில் 75% கல்விக் கட்டணத்தை வசூலிக்க அனுமதி
தனியாா் பள்ளிகளில் 75% கல்விக் கட்டணத்தை வசூலிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தனியாா் பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்ற தமிழக அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

வழக்கின் முந்தையை விசாரணையில் தனியாா் பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை வசூலிப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி தமிழக அரசு, 75% கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்க அனுமதி அளித்துள்ளதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.  

அதாவது தற்போது 25%, பள்ளிகள் திறந்த பிறகு 25%, பள்ளிகள் திறந்து 3 மாதங்களுக்கு பிறகு 25% என மூன்று தவணைகளாக வசூலிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. 

மேலும், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு முடிவெடுக்கும் என்றும் கூறியுள்ளது.

No comments:

Post a Comment