பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் நாளை பல்வேறு நிகழ்ச்சிகள்: வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சிறப்பு ஏற்பாடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 13, 2020

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் நாளை பல்வேறு நிகழ்ச்சிகள்: வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சிறப்பு ஏற்பாடு

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் நாளை பல்வேறு நிகழ்ச்சிகள்: வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சிறப்பு ஏற்பாடு

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்காக நாளை ஆன்லைனில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சித் துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதுதொடர்பாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநரும், மாநிலதொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலருமான ஏ.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசு சார்பில் ஜூலை 2-வது வாரம் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரமாக அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் சென்னை கிண்டியில் இயங்கிவரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையமும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத் திறனாளிகள், வேலைதேடும் இளைஞர்களும் பயன்பெறும் வகையில் ஜூலை 15-ம் தேதி (நாளை) பல்வேறுஇணையவழி நிகழ்ச்சிகள் (வெப்பினார்) மற்றும் ஆன்லைன் போட்டிகள், இணைய வழி தொழில்நெறி கருத்தரங்குகள், சுய முன்னேற்ற உரைகள், பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்த உள்ளன.முன்பதிவு செய்ய வேண்டும்

இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புவோர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இணையதளத்தில் (https://tnvelaivaaippu.gov.in) இதற்கென உள்ளஇணைப்பைப் பயன்படுத்தி முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment