10-ம் வகுப்பு , பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் நாளை விநியோகம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 13, 2020

10-ம் வகுப்பு , பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் நாளை விநியோகம்

10-ம் வகுப்பு , பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் நாளை விநியோகம்

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு, பிளஸ் 2மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் நாளை (புதன்கிழமை) முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

கரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில்,பள்ளிகள் எப்போது திறக்கப்பட்டாலும் முதல் நாளன்றே பாடப்புத்தகங்களை வழங்குவதற்கானஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை செய்து வருகிறது

அதன்படி 10-ம் வகுப்பு, பிளஸ் 1,பிளஸ் 2 வகுப்புகளுக்கான புத்தகங்கள் ஏற்கெனவே அனைத்து பள்ளிகளையும் சென்றடைந்து விட்டன.

இதற்கிடையே, முதல்கட்டமாக 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்க அரசுமுடிவு செய்துள்ளது. இதையொட்டி, பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுமுறைகளை பள்ளிக்கல்வித் துறை கடந்த வாரம் வெளியிட்டது.

பாடப் புத்தகங்கள் வாங்கவரும் மாணவர்களும், பெற் றோரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் பள்ளி வளாகத்தில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது

முதல்வர் தொடங்கிவைக்கிறார்

இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்றுதொடங்கிவைக்கிறார். 

இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதல்கட்டமாக 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் நாளை முதல்அந்தந்த பள்ளிகளில் விநியோகிக்கப்பட உள்ளன. கூடுதலாக பிளஸ் 2 மாணவர்களுக்கு அவர்களின் மடிக்கணினியில் வீடியோ பாடங்களும் பதிவேற்றம் செய்து கொடுக்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment