சத்தியபாமா பல்கலை நுழைவு தேர்வு ரத்து - Minnal Kalvi Seithi

Breaking

Monday, July 13, 2020

சத்தியபாமா பல்கலை நுழைவு தேர்வு ரத்து

சத்தியபாமா பல்கலை நுழைவு தேர்வு ரத்து
சத்தியபாமா நிகர்நிலை பல்கலையில், இன்ஜினியரிங் படிப்புக்கான நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பல்கலை வெளியிட்ட அறிவிப்பு:நாடு முழுவதும், தற்போது கொரோனா தொற்றால், அசாதாரண சூழல் நிலவுகிறது. மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரின் பாதுகாப்பு காரணமாக, சத்தியபாமா நிகர்நிலை பல்கலையில், இந்த ஆண்டுக்கான நுழைவு தேர்வு ரத்து செய்யப்படுகிறது.

மாணவ, மாணவியர், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், சத்தியபாமா நிகர்நிலை பல்கலையில், தங்களுக்கு விருப்பமான இன்ஜினியரிங் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்கலாம்.ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மாணவ, மாணவியருக்கு, மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும்.

இதுதொடர்பாக, www.sathyabama.ac.in என்ற இணையதளம்; 99400 58263 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும், 1800 4251770 என்ற, கட்டணம் இல்லாத எண் வழியே தொடர்பு கொள்ளலாம். மேலும், admissions2020@www.sathyabama.ac.in என்ற, இ - மெயில் வழியாகவும், சந்தேகங்களுக்கு பதில் பெறலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment