மாணவர்களுக்கு சத்தான உணவு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 13, 2020

மாணவர்களுக்கு சத்தான உணவு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மாணவர்களுக்கு சத்தான உணவு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், மதிய உணவு திட்டத்தில் பயனடையும் குழந்தைகளுக்கு, சத்தான உணவுகளை வழங்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் ஆர்.சுதா தாக்கல் செய்த மனு:ஊரடங்கு உத்தரவால், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவு கிடைப்பது இல்லை.

 இந்த நேரத்தில், அவர்களுக்கு சத்தான உணவு கிடைக்க வேண்டும்.அதனால், குழந்தைகளின் வீடுகளுக்கே சென்றோ அல்லது ரேஷன் கடைகளில் சத்தான உணவுப் பொருள் வழங்கவோ ஏற்பாடு செய்யலாம்.

சென்னையில், 200 இடங்கள் உட்பட, தமிழகம் முழுதும், 407 இடங்களில், 'அம்மா' உணவகங்கள் உள்ளன. இந்த உணவகங்களிலும், சைவ உணவு மட்டுமே வழங்கப்படுகிறது. இங்கு முட்டை வழங்க பரிசீலிக்கலாம்.

இதனால், பொது மக்களுக்கும் சத்தான உணவு கிடைக்கும். எனவே, மதிய உணவு திட்டத்தில் பயனாளிகளாக உள்ள மாணவர்களுக்கு, சத்தான உணவு வழங்கவும், 'அம்மா' உணவகத்தில் முட்டை உள்ளிட்ட சத்துணவு வழங்கவும், திட்டம் வகுக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. 

மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.மனுவுக்கு பதில் அளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, 20ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment