சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 ரிசல்ட் :பெயில் என்ற வார்த்தை நீக்கம்: வேறு வார்த்தை சேர்ப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 13, 2020

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 ரிசல்ட் :பெயில் என்ற வார்த்தை நீக்கம்: வேறு வார்த்தை சேர்ப்பு

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 ரிசல்ட் :பெயில்  என்ற வார்த்தை நீக்கம்: வேறு வார்த்தை சேர்ப்பு
சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், மாணவர்களை விட மாணவியர், 5.96 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாடு முழுதும் மொத்தம், 16 மண்டலங்களில், அதிகபட்சமாக, திருவனந்தபுரம் மண்டலத்தில், 97.67 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாவது இடத்தில் பெங்களூரு, 97.05; மூன்றாவது இடத்தில், சென்னை, 96.17 சதவீதமும் பெற்றுள்ளன.

மத்திய அரசின் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி மாணவர்கள், வழக்கம் போல், தேர்ச்சியில் முதலிடம் பெற்றுள்ளனர். அப்பள்ளியில் தேர்வு எழுதிய, 98.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கேந்திரிய வித்யாலயா, 98.62; அரசு பள்ளிகள், 94.94; அரசு உதவி பள்ளிகள், 91.56; தனியார் பள்ளிகள், 88.22 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும், 1.57 லட்சம் மாணவர்கள், 90 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

சி..பி.எஸ்.இ., தேர்வு எழுதிய மாணவர்களில், தேர்ச்சி மதிப்பெண் பெறாத மாணவர்களுக்கு முன், 'பெயில்' என்று குறிப்பிட்டு மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுவது வழக்கம்

. இந்த ஆண்டு பெயில் என்ற வார்த்தை நீக்கப்பட்டு, அதற்கு பதில், மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்ற வார்த்தை குறிப்பிடப்படுகிறது. தேர்வர்கள், தங்களின் மதிப்பெண் பட்டியலை, 'டிஜி லாக்கர்' என்ற, டிஜிட்டல் தளத்தில் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment