ஆந்திரா:அனைத்து பொது நுழைவு தேர்வுகள் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 13, 2020

ஆந்திரா:அனைத்து பொது நுழைவு தேர்வுகள் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு

ஆந்திரா:அனைத்து பொது நுழைவு தேர்வுகள் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு

ஆந்திர மாநிலத்தில் வரும் செப்.,வரையில் அனைத்து பொது நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

இது குறித்து மாநில கல்வித்துறை அமைச்சர் ஆதிமுலாப்பு சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

மாநிலமுதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி பொது நுழைவு தேர்வுகள்(சி.இ.டி) நிலையை மதிப்பீடு செய்தார். மாநிலத்தில் நிலவி வரும் கொரோனா தொற்று காரணமாக சிஇடி -யை செப்டம்பர் மாதம் மூன்றாம் வாரத்திற்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளார்.

மேலும் கொரோனா தொற்று இயல்புநிலைக்கு வந்த பின்னர் கல்லூரியின் இளங்கலை முதல், இரண்டாம் ஆண்டு மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு தேர்வுகள் நடத்தப்படும் . அதுவரையில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படும். தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகளை திறக்க முயற்சிக்கப்படுகிறது. விரைவில் அதுகுறித்து முடிவு எடுப்போம்.

மாணவர்களின் நலனுக்காக சிஇடி மாதிரி சோதனகள் நடத்தப்படும் இவ்வாறு அமைச்சர் ஆதிமுலாப்பு சுரேஷ் கூறினார்.

No comments:

Post a Comment