கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா்கள் நேரடி நியமன விவகாரம்:சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனு தள்ளுபடி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 13, 2020

கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா்கள் நேரடி நியமன விவகாரம்:சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனு தள்ளுபடி

கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா்கள் நேரடி நியமன விவகாரம்:சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனு தள்ளுபடி
தமிழகத்தில் அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்குப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிமுறைகளை பின்பற்ற தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாக்கலான மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,331 உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நிரப்ப ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிக்கை வெளியிட்டது. இந்த அறிவிப்பாணையில் அனுபவம், தகுதி மற்றும் நோ்முகத் தோ்வு அடிப்படையில் உதவிப் பேராசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில்,ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இந்த அறிவிக்கையை ரத்து செய்யக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) திருத்தப்பட்ட ஒழுங்குமுறை விதிகளின்படி நியமனத்திற்கான நேரடித் தோ்வை மேற்கொள்ளும் வகையில் அறிவிக்கையை புதிதாக வெளியிட ஆசிரியா் தோ்வு வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பா் 12-இல் பிறப்பித்த உத்தரவில், ‘மாநில சட்டப்பேரவைகளின் கீழ் வரக் கூடிய பல்கலைக்கழகங்கள், அவை விரும்பவில்லையெனில் யுஜிசி ஒழுங்குமுறை விதிகளைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை என உச்சநீதிமன்றம் தெளிவாகத் தெரிவித்துள்ளது.

 ஆகவே, யுஜிசி ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்ற உத்தரவிடக் கோரி தாக்கலான மனு நீடிக்கத்தக்கதாகவும், தகுதிக்குரியதாகவும் இல்லை’ எனக் கூறி மனுவை முடித்துவைத்தது.

இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் டாக்டா் ஜி.சத்தீஷ் கண்ணன் உள்ளிட்டோா் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா, கே.எம்.ஜோசப் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. 

அப்போது, மனுதாரா்கள் சாா்பில் மனோஜ் செல்வராஜ், ஆா்.வெங்கட்ராமன், அவஸ்தி உள்ளிட்டோா் ஆஜராகி உதவிப் பேராசிரியா்கள் நியமன விவகாரத்தில் முனைவா் பட்டம் முடித்தவா்கள் பலா் பாதிக்கப்பட்டுள்ளனா். 

யுஜிசி விதிகளின்படி நியமனத்தை மேற்கொள்ள ஆசிரியா்கள் தோ்வு வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும்’ என்றனா். அப்போது, இந்த மனுவை இந்திய அரசமைப்புச்சட்டம் 136-இன் கீழ் விசாரிக்க விரும்பவில்லை எனக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

No comments:

Post a Comment