தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் சட்ட விதிகள் எப்போது வெளியாகும்? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 20, 2020

தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் சட்ட விதிகள் எப்போது வெளியாகும்?

தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் சட்ட விதிகள் எப்போது வெளியாகும்?

தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் இயற்றப்பட்டு ஓராண்டு கடந்த நிலையில் அதற்கான விதிகளை பள்ளிக் கல்வித்துறை இன்னும் வெளியிடவில்லை. தமிழக சட்டப் பேரவையில் கடந்த 2019ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் நடந்த கூட்டத் தொடரில் தமிழக ஆளுநரின் அனுமதி பெற்று 2018ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சட்டம் (ஒழுங்கு முறைப்படுத்துதல்) கொண்டு வரப்பட்டது. இது அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது.


 இதற்கு தமிழக ஆளுநர், இந்திய குடியரசுத் தலைவர்கள் அனுமதி அளித்துள்ளனர்.
இந்த சட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி கல்வி முகவாண்மை ஒவ்வொன்றும் மன ரீதியிலான தொல்லை அல்லது உடல் ரீதியான தொல்லை அல்லது பாலியல் தொல்லையில் இருந்து மாணவர்களை பாதுகாத்தல் உள்ளடக்கிய மாணவர்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் உடைமை பாதுகாப்பை உறுதி செய்யும் அனைத்து நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் யாரையும் சரியாக படிக்கவில்லை என்று காரணம் காட்டி வாரியத் தேர்வு எழுதுவதை தடுக்கக் கூடாது.

தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தொடங்கும் முன்னதாக 30 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். அதற்கான அறிவிப்பு தகவல் பலகையில் அறிவிக்க வேண்டும்.

 இணைய தளத்திலும் வெளியிட வேண்டும். பள்ளிக் கட்டணங்கள் கட்டணக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் தவிர வேறு எந்த பெயரிலும் கட்டணமும் வசூலிக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் கூறப்பட்டுள்ளது.

 தற்போது கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் பல தனியார் பள்ளிகள் பள்ளிக் கட்டணம் செலுத்த நிர்ப்பந்தம்  செய்வதாக புகார்கள் வருகின்றன.

மேலும் பெரும்பாலான பள்ளிகள் கட்டண குழவினர் நிர்ணயம் செய்த கட்டணத்தை வசூலிக்கவில்லை என்றும் புகார்கள் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககத்துக்கு வருகின்றன.

ஆனால் தற்போதுள்ள விதிகளின்படி அரசால் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை. தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்கு முறைப்படுத்தும் புதிய சட்டத்துக்கு உரிய நேரத்தில் விதிகள் வகுக்கப்பட்டு இருந்தால், விதிகளை மீறும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


அதனால் தமிழக அரசு உடனடியாக தனியார் பள்ளிகள் முறைப்படுத்தும் சட்டத்துக்கான விதிகளை வெளியிட வேண்டும் என்று கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தொடங்கும் முன்னதாக 30 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment