இடையில் ஓரிரு வருடங்கள் 'பிரேக்' எடுத்து இன்ஜினியரிங்' படிக்கலாம் - புதிய கல்விக்கொள்கை - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, July 29, 2020

இடையில் ஓரிரு வருடங்கள் 'பிரேக்' எடுத்து இன்ஜினியரிங்' படிக்கலாம் - புதிய கல்விக்கொள்கை

இடையில் ஓரிரு வருடங்கள் 'பிரேக்' எடுத்து இன்ஜினியரிங்' படிக்கலாம் - புதிய கல்விக்கொள்கை
புதிய கல்விக் கொள்கையின் மூலம் செய்யப்பட்டுள்ள திருத்தங்களின்படி பொறியியல் போன்ற உயர்படிப்புகளை ஓரிரு வருடங்கள் இடைவெளியுடன் படிக்கலாம் எனப்பட்டுள்ளது.

புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து வரும் உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே, புதிய கல்விக்கொள்கையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை அறிவித்தார். அதன்படி, பொறியியல் போன்ற உயர்படிப்புகளில், ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு பின்னர் படிப்பை தொடரலாம் என்றார்

15 ஆண்டுகளில் இணைப்புக் கல்லூரி என்ற முறை நிறுத்தப்படும் எனவும், தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (NRF) அமைப்படுவதாகவும் கூறினார்.

புத்தகங்கள் மட்டுமின்றி செய்முறை, விளையாட்டுகள் மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படும் என தெரிவித்த அவர், 2030ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்தவே புதிய கல்விக் கொள்கை என்று குறிப்பிட்டார். மேலும், புதிய கல்விக் கொள்கை மூலம் 3 வயது முதல் குழந்தைகளின் கல்வி கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment