மனிதவள மேம்பாட்டுத்துறை மத்திய கல்வித்துறையாக பெயர் மாற்றம் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, July 29, 2020

மனிதவள மேம்பாட்டுத்துறை மத்திய கல்வித்துறையாக பெயர் மாற்றம்

மனிதவள மேம்பாட்டுத்துறை மத்திய கல்வித்துறையாக பெயர் மாற்றம்
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை என்பது மத்திய கல்வித்துறையாக பெயர் மாற்றம் செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.

புதிய கல்விக்கொள்கையின்படி பவ்லேறு புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 34 ஆண்டுகளாக கல்விக்கொள்கையில் மாற்றம் எந்த மாற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில், தற்போது முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 

அதன்படி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை என்பது மத்திய கல்வித்துறையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அத்துறையின் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, உயர்கல்வி அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும் எனவும், முதல் ஆண்டில் பழைய மற்றும் புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்படும், பின்னர் 2ஆம் ஆண்டில் புதிய கல்விக்கொள்கை முழுமையாக அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வி அறிவு குறைவாக உள்ள பகுதிகளில் சிறப்பு கல்வி மண்டலங்கள் உருவாக்கப்படும் எனவும், நாடு முழுவதும் ஒரே கல்வித்தரம் கொண்டு வரப்படும் கூறப்பட்டுள்ளது. மேலும், கல்வி கட்டணங்கள் தன்னிச்சையாக அதிகரிக்கப்படாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment