வாட்ஸ்அப் குரூப்களில் தமிழக அரசு குறித்து அவதூறு: ஆசிரியர்களிடம் விசாரணை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, July 17, 2020

வாட்ஸ்அப் குரூப்களில் தமிழக அரசு குறித்து அவதூறு: ஆசிரியர்களிடம் விசாரணை

வாட்ஸ்அப் குரூப்களில் தமிழக அரசு குறித்து அவதூறு: ஆசிரியர்களிடம் விசாரணை

தமிழக அரசு குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பிய தொடர்பாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறப்பு தாமதமாகி வருகிறது .இதனால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன .அதேசமயம் அரசுப் பள்ளி ஆசிரியர்களை பொறுத்தவரை கல்வி சார்ந்த நடவடிக்கைகளிலும் பாடம் சார்ந்த பயிற்சிகளிலும் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


இதனிடையே சேலம் மாவட்டத்தில் தொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள் வாட்ஸ்அப் குரூப்களில் தமிழக அரசு குறித்த அவதூறு பரப்பிய விவகாரம் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது .இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில் சேலம் மாவட்ட ஆசிரியர்கள் பல்வேறு விதமான வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி அதன் மூலம் கல்வி சார்ந்த மற்றும் பிற பயனுள்ள தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். 

மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ஓரிரு ஒன்றியங்களை சேர்ந்த தொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள் மீம்ஸ் தொடர்பான ஒரு குழுவை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது .சமீப காலமாக அந்தக் குழுவில் தமிழக அரசு பற்றியும் முதல்வரைப் பற்றியும் கேலிக்குள்ளான வகையில் அவதூறு பரப்பப்பட்டு வந்துள்ளது. 


இதுகுறித்து குழுவில் உள்ள ஆசிரியர்கள் சிலர் ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் .அவரின் உத்தரவின் பேரில் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் .

இதில் சில விவகாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவதூறு தொடர்பாக வந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .

அதன் முடிவில் நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் .தமிழக அரசை அவதூறு செய்ததற்காக ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

No comments:

Post a Comment