மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் சரிவு: ஏனென்று புரியாமல் கல்விப்பிரிவினர் அதிர்ச்சி - Minnal Kalvi Seithi

Breaking

Friday, July 17, 2020

மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் சரிவு: ஏனென்று புரியாமல் கல்விப்பிரிவினர் அதிர்ச்சி

மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் சரிவு: ஏனென்று புரியாமல் கல்விப்பிரிவினர் அதிர்ச்சி
:பிளஸ் 2 பொதுத்தேர்வில், கோவை மாநகராட்சி பள்ளி மாணவ - மாணவியர் தேர்ச்சி விகிதம், கடந்தாண்டை விட, 1.74 சதவீதம் குறைந்திருப்பதால், கல்விப்பிரிவு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை மாநகராட்சி சார்பில், 83 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இதில், 16 மேல்நிலைப்பள்ளிகள். 2019-2020 கல்வியாண்டில், 1,639 மாணவ - மாணவியர் தேர்வெழுதினர்; 1,486 நபர்கள் தேர்ச்சி பெற்றனர்; 90.67 சதவீதம்.2018-2019 கல்வியாண்டு, 92.41 சதவீதம் தேர்ச்சி பெறப்பட்டது. தற்போது, 1.74 சதவீதம் தேர்ச்சி சரிந்திருக்கிறது. 

கடந்த கல்வியாண்டில், ஒரு பள்ளி கூட, நுாறு சதவீத தேர்ச்சி பெறவில்லை;ஒரு பள்ளி மட்டுமே சென்டம்இம்முறை, ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளி மட்டும், நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. 

பா.கமலநாதன் நினைவு மேல்நிலைப்பள்ளியில், ஒரே ஒரு மாணவன் தேர்ச்சி அடையாததால், நுாறு சதவீத தேர்ச்சி, தவற விடப்பட்டு உள்ளது.மூன்று பள்ளிகள், 95 சதவீதத்துக்கு மேலாகவும், நான்கு பள்ளிகள், 90 சதவீதத்துக்கு மேலாகவும், ஐந்து பள்ளிகள், 80 சதவீதத்துக்கு மேலாகவும், மூன்று பள்ளிகள், 70 சதவீதத்துக்கு மேலாகவும் தேர்ச்சி பெற்றுள்ளன.எட்டு பள்ளிகளில், தேர்ச்சி சதவீதம் அதிகரித்திருக்கிறது. மற்ற பள்ளிகளில் தேர்ச்சி வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

குறிப்பாக, சித்தாபுதுார், வடகோவை, ஆர்.எஸ்.புரம், ஒக்கிலியர் காலனி, செல்வபுரம் பள்ளியில் தேர்ச்சி விகிதம், அதிகமாக குறைந்திருக்கிறது.

அதிகாரிகள் அதிர்ச்சி!பொதுத்தேர்வு எழுதும் மாணவ - மாணவியருக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. இலவசமாக வினாடி வினா புத்தகம் வழங்கப்படுகிறது. களைப்பு தீர, சிற்றுண்டி வசதி செய்து தரப்படுகிறது. இருப்பினும், தேர்ச்சியில் பின்தங்கியிருப்பதால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment