பல்கலை., தேர்வுகள் மாணவர்களை மோசமாக பாதிக்கும்: மோடிக்கு மம்தா கடிதம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, July 11, 2020

பல்கலை., தேர்வுகள் மாணவர்களை மோசமாக பாதிக்கும்: மோடிக்கு மம்தா கடிதம்

பல்கலை., தேர்வுகள் மாணவர்களை மோசமாக பாதிக்கும்: மோடிக்கு மம்தா கடிதம்

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக இறுதி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த வேண்டும் என்ற யு.ஜி.சி.,யின் உத்தரவை மறு பரிசீலனை செய்யுமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா வைரஸ் பிரச்னையால் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மூன்று மாதங்களாக விடுமுறை விடப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டின் இரண்டாம் பருவ தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. 

இந்த நிலையில் ஜூலை 6-ம் தேதி பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில் பருவத் தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்துவது கட்டாயம் என அறிவித்தது.

கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமல்ல. அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும்; முந்தைய மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சியளிக்க வேண்டும் என யு.ஜி.சி.,யிடம் ராகுல் வலியுறுத்தியிருந்தார். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், செப்டம்பர் மாதத்திற்குள் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் உள்ளது. முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.


இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இதே கோரிக்கையை பிரதமருக்கு கடிதமாக எழுதியுள்ளார். அதில், யு.ஜி.சி.,யின் புதிய வழிகாட்டுதலுடனான கருத்து வேறுபாட்டை பல்வேறு மாநிலங்கள் ஏற்கனவே மத்திய அரசிடம் வெளிப்படுத்தியுள்ளன. எனவே, இந்த விஷயத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment