டாக்டர்களை வீட்டிற்கே அழைக்கும் இணையதளம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, July 11, 2020

டாக்டர்களை வீட்டிற்கே அழைக்கும் இணையதளம்

டாக்டர்களை வீட்டிற்கே அழைக்கும் இணையதளம்

 கொரோனா ஊரடங்கில், உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனை செல்ல முடியாத சூழலில், மத்திய அரசின் இணையதளம் வாயிலாக, டாக்டர்கள் இலவச சிகிச்சை அளிக்கின்றனர்.

கொரோனாவை ஒழிக்க மத்திய அரசு பல இணைய தளம், செயலிகளை மக்களுக்காக வழங்கி வருகிறது. இதில், அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக, 'ஆரோக்கிய சேது' இருக்கும் நிலையில், 2009ல் அரசால் துவங்கப்பட்ட, 'இ.சஞ்சீவனி நேஷனல் டெலி கன்சல்டேஷன் சர்வீஸ்' இன்று மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ரிஜிஸ்ட்ரேஷன்இதன்படி www.esanjeevaniopd.in என்ற இணையதளம் அல்லது ஆப் திறந்தவுடன், 'பேஷன்ட் ரிஜிஸ்ட்ரேஷன், பேஷன்ட் லாகின், டாக்டர் லாகின்' என பட்டன்கள் இருக்கும்.

புதிதாக பதிவு செய்வோர், பேஷன்ட் ரிஜிஸ்ட்ரேஷன் பாக்சில், அலைபேசி எண் கொடுத்த பின், வரும் ஓ.டி.பி.,யை பதிவு செய்ய வேண்டும்.பெயர், முகவரி, மாநிலம், ஊர் போன்ற விபரங்களை கொடுத்த பின், வசிக்கும் பகுதியை தேர்வு செய்ய வேண்டும்.

 ஜெரனல் அவுட் பேஷன்ட், ஓ.பி.டி.,யை கிளிக் செய்து, ஏற்கனவே நம் டாக்டரிடம் பெற்ற, 'ஹெல்த் ரிக்கார்டை' பதிவேற்றம் செய்ய வேண்டும்.இ ~ பிரிஷ்கிரிப்ஷன் ரிஜிஸ்ட்ரேஷன் முடிந்த பின் டாக்டரை சந்திக்கும், 'ஐ.டி., டோக்கன் ஜெனரேட்' செய்ய வேண்டும். நோட்டிபிகேஷன் வந்ததும், லாகின் செய்து காத்திருக்க வேண்டும்.

டோக்கன் எண் வரிசை வரும் போது, டாக்டர், வீடியோ மூலம் நம்முடன் இணைவார். அவரிடம் நம் உடல்நிலை உட்பட குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை குறித்து, ஆலோசனை பெறலாம்.பின் மருந்து, மாத்திரைக்கான சீட்டை டாக்டர் ஜெனரேட் செய்வார். இ~ பிரிஷ்கிரிப்ஷன் பிரிவில் சீட்டை பதிவிறக்கம் செய்து, மருந்துக் கடையில் மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிட்டு நலமாகலாம்.

No comments:

Post a Comment