காய்கறி விற்பனையில் கவுரவ விரிவுரையாளர்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, July 11, 2020

காய்கறி விற்பனையில் கவுரவ விரிவுரையாளர்கள்

காய்கறி விற்பனையில் கவுரவ விரிவுரையாளர்கள்

 பிஎச்.டி., முடித்து, தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, கொரோனா பாதிப்பு காலத்தில் சம்பளம் கிடைக்காததால், தள்ளுவண்டியில் காய்கறி விற்பது, கூலி வேலைக்கு செல்வது போன்ற பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், 109 அரசு கலைக் கல்லுாரிகள் உள்ளன. இதில், சுழற்சி முறையில், 4,084 பேர் தொகுப்பூதியத்தில் பணியாற்றுகின்றனர். மாதச் சம்பளம், 15 ஆயிரம் ரூபாய். ஜூன் முதல் ஏப்ரல் வரை, 11 மாதங்கள் சம்பளம் வழங்கப்படும்.சம்பளம் இல்லாத மே மாதச் செலவை, விடைத்தாள் திருத்தும் பணியில் கிடைக்கும் ஊதியத்தில், சமாளித்தனர்.

ஆனால், கொரோனா பாதிப்பால், கல்லுாரிகள் மூடப்பட்டு, ஏப்., மே, ஜூனில் சம்பளம் வழங்கப்படவில்லை.இதனால், அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில், பலரும், கூலி வேலைக்கு செல்ல துவங்கியுள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு அனைத்து அரசு கல்லுாரி, யு.ஜி.சி., தகுதி, கவுரவ விரிவுரையாளர் சங்க மாநில தலைவர், தங்கராஜ் கூறியதாவது:

கொரோனா காலத்தில் மத்திய அரசும், நீதிமன்றமும் அறிவுறுத்தியும், தமிழக அரசு சம்பளம் வழங்கவில்லை.பிஎச்.டி., முடித்த நிலையிலும், பலர், குடும்பத்தை காப்பாற்ற, கவுரவத்தை விட்டு கூலி வேலை செய்வது, தள்ளுவண்டிகளில் காய்கறி விற்பனை செய்வது என கிடைத்த வேலைகளை செய்யும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சம்பளம் வழங்கக் கோரி, நீதி கேட்டு, அறப்போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment