கல்லூரி தேர்வை முடிவு செய்ய மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்: தமிழக முதல்வர்
கல்லுாரி இறுதியாண்டு மாணவர்களுக்கு, செப்டம்பர் மாதத்திற்குள், செமஸ்டர் தேர்வு நடத்த முடியாத சூழல் உள்ளது. மாநில அரசுகள் முடிவெடுக்க, அதிகாரம் வழங்க வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ரமேஷ் பொக்ரி யாலுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:பல்கலைகள், கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஏப்ரல் மாதம், செமஸ்டர் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக, தேர்வு நடக்கவில்லை.பல்கலைகள், கல்லுாரிகள், தங்கள் வசதிக்கேற்ப தேர்வுகளை நடத்திக் கொள்ள, யு.ஜி.சி., என்ற, பல்கலை மானியக் குழு, ஏப்., 29ல் விதிமுறைகளை அறிவித்தது.
புதிய விதிமுறைமீண்டும் இம்மாதம், 6ம் தேதி, புதிய விதிமுறைகளை வெளியிட்டது. அதில், நாடு முழுதும் உள்ள, அனைத்து கல்வி நிறுவனங்களும், இறுதியாண்டு மாணவர்களுக்கான, செமஸ்டர் தேர்வு களை, செப்டம்பரில் நடத்த வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள், வெளி மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருப்பதால், அவர்களால் தேர்வு மையங்களுக்கு வர முடியாத சூழல் உள்ளது. தற்போதைய அறிவிப்பு, பல சிரமங்களை ஏற்படுத்தி உள்ளது.மாணவர்கள் பலரால், இணைய வசதி பெற முடியாத சூழல் உட்பட, பல்வேறு காரணங்களால், இணைய வழி தேர்வுகளையும் நடத்த முடியாத நிலை உள்ளது.
மேலும், பெரும்பாலான அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகள், பொறியியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக் கல்லுாரிகள், நோய் அறிகுறி இல்லாத, கொரோனா தொற்றாளர்களை தனிமைப்படுத்தி வைக்கும் மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.
இந்நிலை, இன்னும் சில காலம் நீடிக்க வாய்ப்புள்ளது.எனவே, செப்டம்பர் மாதத்திற்குள், தேர்வுகளை நடத்த முடியாத சூழலில் உள்ளோம். இதனால், மாணவர்கள் பாதிக்கப்படுவர்.

சொந்த மதிப்பீட்டு'கேம்பஸ்' நேர்காணலில், வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், வெளிநாடுகளில் படிக்க விண்ணப்பித்த மாணவர்கள், பெரிதும் பாதிக்கப்படுவர்.பல மாநிலங்கள், இறுதி பருவ தேர்வுகளை நடத்துவதில்லை என, முடிவு செய்துள்ளன.
தொழில் வாய்ப்புகள், எதிர்கால வாய்ப்புகளை உறுதி செய்வதற்கு, தரம் மற்றும் கல்வி நம்பகத் தன்மையில் சமரசம் செய்யாமல், மாநிலங்களுக்கு அதன் சொந்த மதிப்பீட்டு முறைகளை உருவாக்க, சுதந்திரம் வழங்கலாம்.
யு.ஜி.சி., - ஏ.ஐ.சி.டி.இ., - சி.ஓ.ஏ., - பி.சி.ஐ., - என்.சி.டி.இ., தேசிய ஓட்டல் மேலாண்மை, கேட்டரிங் தொழில்நுட்பத்திற்கான கவுன்சில் ஆகியவை, அந்தந்த மாநில அரசுகளின் முடிவுகளை அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும்.இது, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் உதவிகரமாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment