ஆசிரியர்களுக்கு டிப்ளமா படிப்பு அறிமுகம் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, July 11, 2020

ஆசிரியர்களுக்கு டிப்ளமா படிப்பு அறிமுகம்

ஆசிரியர்களுக்கு டிப்ளமா படிப்பு அறிமுகம்
அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, 'டிப்ளமா' படிப்பை, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., அறிமுகம் செய்துள்ளது.

நாடு முழுதும் அனைத்து பள்ளி, கல்லூரி பாடத் திட்டங்களிலும், ஆன்லைன் வழி வகுப்புகள் துவங்கி உள்ளன. இதற்காக, மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன

.இந்நிலையில், ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள், அறிவியல் பாடத்தை எளிமையாகவும், புரியும் வகையில் நடத்தவும், புதிய படிப்பு நடத்தப்பட உள்ளது.

இந்த ஆன்லைன் வழி டிப்ளமா பயிற்சி படிப்பை, என்.சி.இ.ஆர்.டி., அறிமுகம் செய்துள்ளது.இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.

வரும், 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். உரிய தேதியில் விண்ணப்பிப்பவர்களுக்கு, ஆன்லைன் வழியில் பாடங்களை நடத்த உள்ளதாக, என்.சி.இ.ஆர்.டி., தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment