தனியார், டிவி, யு டியூப்களில் வீடியோ பாடம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 15, 2020

தனியார், டிவி, யு டியூப்களில் வீடியோ பாடம்

தனியார், டிவி, யு டியூப்களில் வீடியோ பாடம்
அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி, 'டிவி' மட்டுமின்றி, தனியார், 'டிவி'க்கள்; 'யு டியூப்' சேனல்களிலும் பாடங்களை ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக, தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில் 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

அரசு பள்ளி மாணவர்களுக்கும், இந்த வாய்ப்பு கிடைக்கும் வகையில், தமிழக அரசின் கல்வி, 'டிவி'யில் வீடியோ பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்த ஒளிபரப்பை முதல்வர் இ.பி.எஸ்., நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்

.ஒவ்வொரு நாளும் காலை, 6:00 மணி முதல் இரவு, 11:00 மணி வரை அரை மணி நேரம் மற்றும் ஒரு மணி நேர பாட வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

இதற்கான நிகழ்ச்சி அட்டவணை, https://www.kalvitholaikaatchi.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.வரும் நாட்களில் தனியார், 'டிவி'க்கள், யு டியூப் சேனல்கள் ஆகியவற்றிலும், வீடியோ பாடங்கள் நடத்தப்பட உள்ளன. இதற்காக கல்வி துறையினரிடம், தனியார் நிறுவனங்கள் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன.

No comments:

Post a Comment