வேளாண் பல்கலை சேர்க்கை ஆகஸ்ட் மாதம் துவக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, July 17, 2020

வேளாண் பல்கலை சேர்க்கை ஆகஸ்ட் மாதம் துவக்கம்

வேளாண் பல்கலை சேர்க்கை ஆகஸ்ட் மாதம் துவக்கம்
வேளாண் பல்கலையில் மாணவர் சேர்க்கை, ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவங்குகிறது.

தமிழ்நாடு வேளாண் பல்கலை டீன் கல்யாணசுந்தரம் அறிக்கை:தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 14 உறுப்பு கல்லுாரிகள், 28 இணை கல்லுாரிகள் உள்ளன. பத்து இளங்கலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை, மற்றும் கலந்தாய்வை ஆகஸ்ட் முதல் வாரத்தில், துணைவேந்தர் குமார், இணையதளம் வாயிலாக துவக்கி வைப்பார்.


உறுப்பு கல்லுாரிகளில், 1,600 இடங்களுக்கும், இணைப்பு கல்லுாரிகளில், 3,100 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.மாணவர் சேர்க்கை தொடர்பான பதிவு மற்றும் விண்ணப்பத்தை நிரப்புதல், தரவரிசை பட்டியல் வெளியீடு, கலந்தாய்வு, இடஒதுக்கீடு, சான்றிதழ் சரிபார்ப்பு. பாடப்பிரிவு மற்றும் கல்லுாரிகளை ஒதுக்கீடு செய்தல், கல்லுாரியில் சேர்வதற்கான இடைக்கால அனுமதி வழங்குதல் ஆகிய அனைத்தும் இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும். 


நேரில் பல்கலைக்கு வருவதை தவிர்க்கவும். விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பங்கள் மற்றும் விண்ணப்ப கட்டணத்தை, www.tnauonline.in என்ற இணையதளம் வாயிலாக, ஆகஸ்ட் முதல் வாரத்தில் பதிவேற்றம் செய்யலாம்.

இதர விபரங்களை அறிய, www.tnauonline.in என்ற இணையதளத்தில் உள்ள தகவல் கையேடு உதவிகரமாக இருக்கும். விபரங்களுக்கு, 0422 - 6611322, 6611328 ஆகிய தொலைபேசி எண்களில், தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment