தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம்: வரும் 20ம் தேதி முதல் விண்ணப்பிக்க அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, July 17, 2020

தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம்: வரும் 20ம் தேதி முதல் விண்ணப்பிக்க அறிவிப்பு

தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம்: வரும் 20ம் தேதி முதல் விண்ணப்பிக்க அறிவிப்பு
தனியார் பள்ளிகள் தங்களுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ள 20ம் தேதி முதல் விண்ணப்பங்களை கொடுக்கலாம் என்று தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு  அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் இயங்கும் சுயநிதி தனியார் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்த கடந்த 2008ம் ஆண்டு கட்டண நிர்ணயக் குழுவை அரசு அமைத்தது. இந்த குழுவின் முதல் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் நியமிக்கப்பட்டார். 

அப்போது தனியார் பள்ளிகளின் வரவு செலவு கணக்குகளை பெற்று அதற்கேற்ற வகையில் அந்தந்த பள்ளிகளுக்கான கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டன.

இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் வரை ஓய்வு பெற்ற நீதிபதி மாசிலாமணி கட்டணக் குழுவின் தலைவராக இருந்தார். அவரது பணிக்காலம் மார்சுடன் முடிந்ததை அடுத்து, தற்போது அடுத்த 3 ஆண்டுக்களுக்கான தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்ரமணியம் ஜூலை 1ம் தேதி நியமிக்கப்பட்டார்.

 அவர் பொறுப்பேற்ற பிறகு தற்போது 2020-2021ம் கல்வி ஆண்டு முதல் 2022-2023ம் கல்வி ஆண்டு வரையிலான கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் பணியை தொடங்கியுள்ளார்.  இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கட்டணக் குழுவின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில், தனியார் பள்ளிகள் அடுத்த 3  கல்வி ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.  20ம் தேதி முதல் விண்ணப்பங்களை கட்டணக் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்தந்த பள்ளிகளின் 2019-2020ம் கல்வி ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கைகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.  

இதற்கான விண்ணப்பங்களை வரும் 20ம் தேதி முதல் செப்டம்பர் 25ம் தேதிக்குள் tnfeecommitee.com என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். நேரடியாகவும் விண்ணப்பங்களை கட்டண குழு அலுவலத்துக்கு அனுப்பலாம். 

செப்டம்பர் 25ம் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment