முதல் பருவத்துக்கு பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு நடப்பு கல்வியாண்டுக்கான முதல் பருவ புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு நடப்பு கல்வியாண்டுக்கான முதல் பருவ புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. வரும், 31 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள தால், பள்ளி எப்போது திறக்கப்படும் என்பது குறித்து, தமிழக அரசு இன்னமும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, 120 அரசு பள்ளிகள், 128 அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவசமாக வழங்க, பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு, கரூர் நகராட்சி மேல் நிலைப்பள்ளியில் இருந்து, அனுப்பும் பணிகள் நடந்து வருகின்றன.
பள்ளிகள் திறக்கப்பட்டதும், ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பில் தலா, 7,000 மாணவ, மாணவியர், எட்டாம் வகுப்பில், 7, 500 பேர், ஒன்பதாம் வகுப்பில், 9,800 பேர், 10ம் வகுப்பில், 10 ஆயிரத்து, 100 பேர், பிளஸ் 1 வகுப்பில், 8,800 பேர், பிளஸ் 2 வகுப்பில், 7,900 பேர் உள்பட, 58 ஆயிரத்து, 100 பேருக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
No comments:
Post a Comment