ஜூம் செயலியில் இன்று அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 6, 2020

ஜூம் செயலியில் இன்று அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜூம் செயலியில் இன்று அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஜூம்' செயலியில் அறிவியல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, இன்று மாலை நடக்கிறது' என, அறிவியல் பலகையின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:
 மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சாரின், தமிழ் பிரிவான அறிவியல் பலகை மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் சார்பில், 'ஜூம்' செயலியில் அறிவியல் விழிப்புணர்வு நடந்து வருகிறது. இன்று மாலை, 4:00 மணிக்கு எட்டாவது நிகழ்ச்சி நடக்கிறது. அதில், பொள்ளாச்சி துணை பேராசிரியர் லோகமாதேவி, 'தெரிந்த தாவரங்கள், தெரியாத விஷயங்கள்' என்ற தலைப்பில் பேசுகிறார். 

நிகழ்ச்சியின் அடையாள எண் (ஐ.டி.,) 91485613084, பாஸ்வேர்டு எண், 685740 என வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை அறிவியல் பலகையின் முகநூல் பக்கத்திலும் காண முடியும். விபரங்களுக்கு, 96772-97733 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment